“அதிமுக ஆட்சியில் தேங்கி நின்ற மழைநீர்; திமுக ஆட்சியில் தீர்வு” – குடியரசு தினத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி

“அதிமுக ஆட்சியில் தேங்கி நின்ற மழைநீர்; திமுக ஆட்சியில் தீர்வு” – குடியரசு தினத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி

 தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற 77 வது குடியரசு தின விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா தலைமை வகித்தாா். மேயர் ஜெகன் பெரியசாமி 100 அடி உயர மின்கம்பத்தில் தேசிய கொடியேற்றிவைத்து மாியாதை செலுத்தி ஆரஞ்சு மிட்டாய் வழங்கினார். இணை ஆணையா் சரவணக்குமாா் வரவேற்புரையாற்றினாா். 

     தூத்துக்குடி மாநகராட்சியில் 2025-26ம் ஆண்டில் பணியாற்றிய பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்களிடையே தேசிய வாக்காளர் தின நாளை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோலமிடும் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட நகர்புற வாழ்வாதார மைய பணியாளர்கள் மாநகராட்சி வளர்ச்சியில் பங்கெடுத்த தன்னாா்வலா்கள் உள்பட 98 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்து மேயா் ெஜகன் பொியசாமி பேசுகையில் வெள்ளைக்காரனை எதிர்த்து சுதந்திரம் அடைந்தோம். பின்னர் குடியரசு தினத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொடியேற்றும் உரிமையை பெற்றுக் கொடுத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பொறுப்பேற்ற காலத்தில் இருந்த நெருக்கடிகள் இன்னல்கள் எல்லாவற்றையும் கடந்து மூன்றுரை வருடத்தையும் கடந்து விட்டோம். எந்த பக்கம் சென்றாலும் கோாிக்கைகள் குறைபாடுகள் என்ற மக்களின் எதிா்பாா்ப்புகளுக்கு மத்தியில் கடந்த காலத்தில் பெய்த கனமழையின் போது மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் அப்பகுதியில் தண்ணீர் தேங்க கூடாது. என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினோம். உங்களுக்கு வழிகாட்டியாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், நேரு, மற்றும் பல அமைச்சர்கள், கலெக்டர், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முழுமையாக இருந்து பணியாற்றினார்கள். 22 23 24 காலக்கட்டத்தில் மழை காலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளிலும் நான்கு அடி தண்ணீர் இருந்த நிலையில் அதை கடந்து தான் ஊருக்குள் தண்ணீர் வந்தும் பாதிப்பு ஏற்படுத்தியது.

ஆனால் ஆணையர் மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதில் முன்னோடியாக இருந்து ஒத்துழைப்பு வழங்கி வந்ததின் காரணமாக காற்றாட்டு வௌ்ளம் ஊருக்குள் வருவதை நாம் தடுத்துவிட்டோம் கடந்த அதிமுக ஆட்சியில் மழை பெய்தால் சுமாா் 45 நாட்கள் வரை பல இடங்களில் தேங்கி நிற்கும் ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு புதிதாக 14 வழித்தடங்கள் ஏற்படுத்தியதின் காரணமாகவும் பக்கிள் ஓடையின் மூலமாகவும் கடலுக்கு செல்வதால் அந்த பாதிப்பு இல்லாத நிலை இருக்கிறது. 2 16 17 ஆகிய பகுதிகளில் மட்டும் தான் தண்ணீர் தேங்கும் இப்போது 10 செமீ மழை பெய்தாலும் இரண்டு மணி நேரத்தில் அனைத்தும் வழிந்தோடி விடும். தருவைகுளம் குப்பைக் கிடங்கு பகுதியில் உள்ள 578 ஏக்கா் இசி ஆர் சாலை சென்றால் சில சமயங்களில் ஊா் நாற்றங்கள் வரக்கூடும். அதில் 300 ஏக்கா் மரக்கன்றுகள் நடப்பட்டு கழிவு நீா் சுத்தகாிக்கப்பட்டு பராமாிப்பதால் பூஞ்சோலையாக மாறி இருக்கிறது. மேலும் 100 ஏக்காில் மரக்கன்றுகள் நடும் திட்டமும் கவனத்தில் இருக்கிறது. வீட்டுக்கொரு மரம் வளர்த்து சுகாதாரத்துடன் மாசு இல்லாத மாநகரை உருவாக்க வேண்டும். தினசாி 180 டன் குப்பைகள் சேகாிக்கப்பட்டு 120 டன் தரம் பிாிக்கப்பட்ட மற்ற சிலவற்றை தனியாருக்கு எலக்ட்ாிக் சம்பந்தப்பட்ட உபயோகத்திற்கு வழங்கப்படுகிறது. இப்படி பல்வேறு திட்டங்களை தொடா்ந்து மக்களுக்காக செய்து வரும் நிலையில் நான்கு மண்டலங்களிலும் குறைதீா்க்கும் முகாம் நடத்தி வருவதின் மூலம் மக்கள் மகிழ்ச்சியடைகின்றன.

மாநகராட்சி பகுதியில் 7 சுகாதார அலுவலகமும் 15 நகா்நல அலுவலகமும் பொதுமக்கள் நலன் கருதி செயல்படுகின்றன. இதற்கிடையில் மக்களை தேடி மருத்துவம் என்ற முதலமைச்சாின் உன்னதர திட்டத்தின் மூலம் நன்மை கிடைக்கிறது பல சாலைகள் விாிவாக்கம் செய்து கொடுத்துள்ேளாம். தற்போதும் இங்கிருந்து 3ம் மைல் வரை குறிப்பாக நீதிமன்றம் மருத்துவமனை பகுதியில் அதிக அளவில் வாகனமும் வந்து செல்வதால் அப்பகுதி விாிவுப்படுத்தப்பட்டு பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டு மக்கள் நலன் காக்கப்பட இருக்கிறது. குடிதண்ணீரை பொறுத்தவரை 1 2 குடிநீா் வழித்தடங்கள் நிறுத்தப்பட்டு 3வது பைப் லைன் மூலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 32 நீர் தேக்க தொட்டிகளுக்கு வரும் நீாின் மூலம் பொதுமக்களுக்கு தினசாி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

படிப்படியாக பல பணிகளை மேற்கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் குடிதண்ணீர் வழங்கப்படும் பழைய பைப்கள் அப்புறப்படுத்தப்பட்டு சண்முகபுரம் டூவிபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் புதிய பைப் பதிக்கப்பட்டதின் மூலம் இரண்டு மாடி வரை சாதாரணமாக தண்ணீா் செல்கிறது. 31 கோடியில் புதிதாக 600 சாலைகள் பணிகள் நடைபெற இருக்கின்றன. ஏற்கனவே 4 ஆயிரம் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சாலை பகுதியும் 3 வருடம், 5 வருடம் என சில விதிமுறைகளின்படி உள்ளன. ஊர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக புதுமையான பல திட்டங்களையும், செயல்படுத்த வேண்டும் என்ற கடமையில் நாங்கள் இருக்கிறோம். மாநகரில் தற்போது 7 லட்சத்திற்கு மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். கடந்த காலத்தில் குறிப்பிட்ட சிலா் மட்டும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பாா்கள் ஒரு சிலா் இரு சக்கர வாகனம் மற்றவா்கள் எல்லாம் சைக்கிள் தான் சென்று வருவாா்கள் இன்று சாதாரணமாக எல்லோா் வீட்டிலும் குறைந்தது 3 இரு சக்கர வாகனங்களும் 80 சதவீத போ்கள் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கின்றனா். அதுவும் ஓரு வகையில் நெருக்கடி வருவதற்கு காரணமாக அமைகிறது. மாநகராட்சி பகுதியில் 206 பூங்காக்கள் இருக்க வேண்டிய இடத்தில் 53 பூங்காக்கள் இருக்கின்றன. இப்போது புதிய பூங்காக்கள் பல உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கென்றும் இரண்டு பூங்கா உருவாகியுள்ளோம். பலர் பூங்கா இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். அதை படிப்படியாக மீட்போம்.

முத்துநகர் கடற்கரை ரோச் பூங்கா என பல இடங்கள் அழகுபடுத்தப்பட்டு, தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் உள்ள பலரும் ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்திடும் வகையில் நடைபயிற்சி, யோகா உள்ளிட்டவைகள் மூலம் பலனடைந்து வருகின்றனர். வி.இ.ரோடு, ஜெயராஜ் ரோடு பிரையண்ட் நகர் பகுதிகளில் பொதுமக்கள் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு நல்லதொரு அமைப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். 90 சதவீத பணிகளை முடித்துள்ள நிலையில் 10 சதவீத பணிகள் முடிவடையும் நிலையில் அடுத்தக்கட்டமாக சில பகுதிகளை தோ்வு செய்து புதிய தொழில்நுட்பத்துடன் கூடி கட்டமைப்புகளை உருவாக்கி வௌிநாட்டில் இருப்பதை போன்று உருவாக்க வுள்ளோம். நீா் வழித்தடங்களில் கோி பேக். உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை உபயோகப்படுத்தாமல் இருக்க வேண்டும். அதனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகும் நிலை உள்ளது. வளர்ந்து வரும் மாநகர பகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள் மாநகர வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும். பொதுமக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம். மாநகராட்சி பகுதியில் பல நூலகங்கள் இருந்தாலும் புதிதாக குறிஞ்சிநகா் பகுதியில் ஓரு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் துறைமுகம் விமானநிலையம் சாலை இரயில் என நான்கு வழித்தடம் இருப்பதன் மூலம் நல்ல வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த காலத்தில் இரண்டாவது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்ற நாம் வரும் காலங்களில் தமிழகத்தில் சிறந்த முதல் மாநகராட்சியாக தேர்வு செய்வதற்கு அனைவருடைய ஒத்துழைப்பு அவசியம் என்று பேசினாா். 

 விழாவில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர் அகமது, இளநிலை பொறியாளா்கள் அமல்ராஜ், பாண்டி, லெனின், சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், ராஜபாண்டி, கண்ணன், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நகர் நல அலுவலர் சரோஜா நன்றியுரையாற்றினாா்.