தமிழ்நாட்டில் மீண்டும் முதல்வராக ஸ்டாலின் வருவார்.., தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளர் கீதா ஜீவன் பேட்டி.!

தமிழ்நாட்டில் மீண்டும் முதல்வராக ஸ்டாலின் வருவார்..,  தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளர் கீதா ஜீவன் பேட்டி.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே ஏராளமான வாக்காளர்கள் வாக்களிப்பதாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள் 6,77,004, பெண்கள் 7,10,981, மூன்றாம் பாலினத்தவர் 201 என மொத்தம் 13,88,186 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்களிப்பிற்காக 1868 வாக்குபதி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து  வாக்குப்பதிவு மையங்களிலும் இன்று காலை சரியாக ஏழு மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வாக்கு சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதாக இணைந்து வரிசையில் காத்து நின்று வாக்களித்து வருகின்றனர். 

புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கீதா மெட்ரிக் பள்ளியில் உள்ள வாக்குபதி மையத்தில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் தனது குடும்பத்துடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,  தமிழ்நாட்டில் மீண்டும் முதல்வராக ஸ்டாலின் வருவார் என்றார்.