தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்: ஓட்டப்பிடாரம் அருகே சோகம்!!

தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்: ஓட்டப்பிடாரம் அருகே சோகம்!!

ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த துக்கத்திலும் அவரது மகன் பிளஸ்-2தேர்வு எழுதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலித்தொழிலாளியான இவரது மனைவி சிவனம்மாள். இவர்களுக்கு கதிரவன் என்ற மகனும், எழிலரசி என்ற மகளும் உள்ளனர். கதிரவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பும், எழிலரசி 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

கருப்பசாமி சிறுநீரக பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அவர் பரிதாபமாக இறந்தார். உடலை பார்த்து மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். தற்போது பிளஸ்-2 தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கில தேர்வு நடந்தது. தந்தை இறந்த துக்கத்திலும் கதிரவன் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார்.

தேர்வு முடிந்து மதியம் வீட்டிற்கு வந்த அவரை, அவரது தங்கை எழிலரசி கட்டிப்பிடித்து கதறி அழுதார். இது அங்கிருந்த அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்தது. உறவினர்கள், 2 பேருக்கும் ஆறுதல் கூறி தேற்றினார்கள். தொடர்ந்து கருப்பசாமியின் உடல் அடக்கம் செய்

யப்பட்டது.