தூத்துக்குடியில் பரபரப்பு... மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு எரிந்து சேதம்!

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன் தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் அமலில் உள்ளதால், அனைத்து விசைப் படகுகளும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது விசைப் படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், தூத்துக்குடி மட்டக்கடை புதுத்தெருவைச் சேர்ந்த பெனாஸ்டிக் மற்றும் அமலன் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகில் வெல்டிங்  வேலை நடந்து கொண்டிருந்த அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து தூத்துக்குடி மற்றும் தெர்மல் நகர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரத்தில் தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அருகில் உள்ள படகுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. எனினும் இந்த தீபத்தில் ரூ.2 லட்சம்  மதிப்பில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக  தென்பாகம் பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப் இன்ஸ்பெக்டர்கள் கெங்கநாத பாண்டியன், சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் மீன்பிடி துறைமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.