திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.3.42 கோடி : ஒரு கிலோ தங்கம்-22கிலோ வெள்ளி காணிக்கை!

திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.3.42 கோடி : ஒரு கிலோ தங்கம்-22கிலோ வெள்ளி காணிக்கை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.3.42 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும், ஒரு கிலோ தங்கம், 22 கிலோ வெள்ளி பொருட்களும் இருந்தன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் எண்ணிக்கை வசந்த மண்டபத்தில் வைத்து நடந்தது. கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. 

இதில், இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் ஆறுமுகம், நாகவேல், கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, தக்காரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

உண்டியல் எண்ணிக்கையில் 3 கோடியே 42 லட்சத்து 28 ஆயிரத்து 824 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 1 கிலோ 701 கிராம், வெள்ளி 22 கிலோ 791 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 1237, வெள்ளி பொருட்கள், வெள்ளி சுவாமி முகம் மற்றும் கேரளா மாநில லாட்டரி சீட்டும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.