தூத்துக்குடி மாநகராட்சி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தொடரும் ஆக்கிரமிப்பு : கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்..!
தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுப்பட்டு பயன்படுத்த பட்டு வரும் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் சுமார் 100 க் கும் மேற்பட்ட கடைகள் அமைக்க பட்டு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மூலம் வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது . தினசரி சுமார் பல்லாயிரக்கணக்கான பயணிகள் தங்களது அன்றாட பணிக்கும் வெளியூரில் இருந்து வருபவர்கள் மற்றும் வெளியூருக்கு செல்வோர் இப்ப பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் பயணிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு வியாபாரிகள் கேஸ் சிலிண்டர் வைத்து ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பயணிகள் தண்ணீர் குடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் பேருந்து நிலையத்திற்குள் வரும் பொதுமக்கள் தண்ணீர் அருந்த முடியாத அளவிற்கு வியாபாரிகள் பைப்பையும் ஆக்கிரமித்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமின்றி பெரும்பான்மையான கடைகளின் பொருட்கள் கடைக்கு வெளியே மக்கள் நடந்து செல்லும் பாதையில் தான் வைக்கப்பட்டுள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.