அரசு பேருந்தில் திடீரென மயங்கி சரிந்த ஓட்டுநர் : பயணிகள் தப்பினர் - தூத்துக்குடியில் பரபரப்பு..!

தூத்துக்குடியில் அரசு பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்ட நிலையில், பேருந்தை சாலையோரமாக நிறுத்தியதால், 38 பயணிகள் உயிா்தப்பினா்.
விருதுநகரிலிருந்து நேற்று பிற்பகல் திருச்செந்தூருக்கு அரசு பேருந்தை விருதுநகரை சேர்ந்த ஓட்டுனர் லிங்கப்பாண்டி மற்றும் நடத்துனர் சிவகுமார் ஆகியோர் இயக்கி வந்துள்ளனர். பேருந்து தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் வந்து பயணிகளை இறக்கி விட்டு பின்பு திருச்செந்தூருக்கு பயணிகளை ஏற்றி சுமார் 38 பயணிகளுடன் இன்று மாலை நான்கு 20 மணியளவில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது
தூத்துக்குடி சத்யாநகா் நியோ டைடல் பாா்க் அருகே சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுநருக்கு திடீரென மயக்கம் வருவதுபோல் இருந்ததாம். உடனே அவா் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு ஸ்டீரிங்கில் மயங்கி சாய்ந்துள்ளாா். நடத்துநா் சிவகுமாா், ஆம்புலன்ஸ் மற்றும் உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.
லிங்கபாண்டி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அவா் இயல்பு நிலைக்கு திரும்பினாா். சரியான நேரத்தில் அவா் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டு, பயணிகள் உயிா் தப்பினா். தூத்துக்குடியில் அரசு பேருந்து ஓட்டுனர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி சரிந்த நிலையிலும் பயணிகளின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.