தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது : பைக் பறிமுதல்!

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது : பைக் பறிமுதல்!

நாலாட்டின்புதூர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2பேரைை போலீசார் கைது செய்தனர். 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகன்நாதன் மேற்பார்வையில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பத்மாவதி தலைமையில் சார்பு ஆய்வாளர் செல்லதுரை மற்றும் போலீசார் நேற்று முடுக்குமீண்டான்பட்டி பகுதியில் வாகனத்தை தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் நாலாட்டின்புதூர், ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் இசக்கிமுத்து (25) மற்றும் முடுக்குமீண்டான்பட்டி பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் முகேஷ்குமார் (24) என்பதும் அவர்கள் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.