தூத்துக்குடி கோட்டத்தில் அஞ்சல் சேவையில் ஈடுபட விண்ணப்பங்கள் வரவேற்பு

தூத்துக்குடி கோட்டத்தில் அஞ்சல் சேவையில் ஈடுபட விண்ணப்பங்கள் வரவேற்பு

தூத்துக்குடி கோட்டத்தில் அஞ்சல் சேவையில் ஈடுபடுவதற்காக உரிமம் பெற்ற நிறுவனங்களை தொடங்குவதற்கு ஆர்வமுடைய, தகுதியுடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அஞ்சல்தலைகள் விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், பணவிடை (மணியார்டர்) ஆகியவற்றை பதிவு செய்தல் மற்றும் பல்வேறு சிறு வகை சேவைகள் உள்ளிட்ட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்களைத் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனங்களை நடத்துவதற்கு உகந்த இடங்களை வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். 

இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள், தகுதிகள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன், அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி https://www.indiapost.gov.in/VAS/Pages/Content/Franchise_Scheme.aspx ன் மூலமும் பதி விறக்கம் செய்யலாம் என்று தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திர கூறியுள்ளார்.