தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் 8 ஆம் வகுப்பு படித்த மருத்துவர்..?
தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளராக அதிமுக சார்பில் சிவசாமி வேலுமனி என்பவர் போட்டி இடுகிறார். தூத்துக்குடி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இவர் சென்னை வடபழனியில் puttur kattu bone and joint centre pvt Lம்ட் என்ற பெயரில் எலும்பு முறிவு வைத்தியம் செய்து வருகிறார். மேலும் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் 8 ஆம் வகுப்பு பாதியில் நிறுத்தபட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் அவர் தனது எலும்பு முறிவு வைத்திய சாலை தொடர்பான பதிவுகளில் தன்னை மருத்துவர் என்று குறிப்பிட்டுள்ளார். 8 ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமால் அதிமுக வேட்பாளர் மருத்துவர் என போலியாக விளம்பரம் செய்துள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதிமுக சார்பில் போலி மருத்துவர்..? வேட்பாளராக அறிவிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவினர் குற்றச்சாட்டு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது அப்போது திமுக சார்பில் அதிமுக வேட்பாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எட்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி டிப்ளமோ படித்து மருத்துவராக விளம்பரம் செய்து வருவதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டினர்.
இதற்கு வேலுமணி தரப்பு வக்கீல்கள் தேர்தல் அலுவலரிடம் அதிமுக வேட்பாளர் தனது கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு பாதியில் நிறுத்திவிட்டார் என்பதை மட்டுமே தாக்கல் செய்துள்ளதாகவும் இதர தகவல்கள் எதற்கும் ஆதாரம் இல்லை எனவும் வாதிட்டனர். மருத்துவர் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளித்ததன் பேரில் அவரது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.