பெண்கள் கல்லூரிக்குள் நுழைவதன் மூலம் சமூகப் புரட்சி ஏற்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
உயர் கல்வி பெறாத பெண்கள் தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்காமல் ஓயமாட்டேன் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவிகளுக்கான ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் புதுமைப்பெண் திட்டத்தில் புதிதாக இணைந்து புதிதாக சாதனை படைக்க உள்ள மகள்களே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசத்தொடங்கினார். மேலும் அவர் கூறியதாவது:- தூத்துக்குடி முத்து நகரம் மட்டுமல்ல வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்திற்கும் மகாகவி பாரதியாரின் கவிதை தமிழுக்கும் கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் தியாகத்திற்கும் சொந்தமான ஊர் இப்படி பெரும் தலைவர்களுக்கும் பல பெருமைகளுக்கும் சொந்தமான இந்த தூத்துக்குடி மண்ணில் புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் எனும் மகத்தான திட்டத்தை தொடங்கி வைக்கும் விழாவில் பங்கேற்றுள்ள பங்கேற்றுள்ள அனைவருக்கும் காலை வணக்கம்.
ஆயிரக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பதை காணும்போது திராவிடன் ஸ்டாக் எனபதில் பெருமையாக உள்ளது. இதற்கு நேர் எதிராக இன்னொரு ஸ்டாக் இருக்கிறது நம்மை சாதி மதம் என்று சொல்லி பிரிக்க நினைக்கும் ஸ்டாக் வளர்ச்சியை பற்றி யோசிக்காமல் வன்முறை எண்ணத்தை தூண்டிவிடும் வண்மம் பிடித்த ஸ்டாக், பெண்கள் என்றால் வீட்டில் தான் இருக்க வேண்டும் கடைசி வரை ஒருவரை சார்ந்திருக்க வேண்டும் என்று மனுவாத சிந்தனையை இந்த காலத்திலும் பேசிக்கொண்டு திரியும் எக்ஸ்பிரியான ஸ்டாக்கு, அப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பித்து இன்றைக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் அனைத்து நிலைகளிலும் முதலிடத்தில் உள்ளனர்.
நாட்டில் உயர்கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கையில் தமிழகம் தான் டாப். தமிழக பெண்கள் இந்தியாவிலேயே மதிப்பெண் உள்பட அனைத்திலும் டாப்-ஆக உள்ளீர்கள். உயர்கல்வி பயில்வது, வேலைக்கு செல்வது அனைத்திலும் தமிழக பெண்கள் டாப்-ல் இருப்பதே பெரியாரின் கனவு. கல்வியை பொறுத்தவரை பெண்கள் தான் முன்னிலையில் உள்ளனர். 100 ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ரீதியாக, பாலின ரீதியாக கல்விக்கு தடை இருந்தது. கல்வி கனவை அனைவருக்கும் திறந்து விட்ட ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி.
இந்தியாவிலேயே அனைவருக்கும் கல்வி என சட்டம் இயற்றியது நீதிக்கட்சி. 100 பெண்களில் இருவர் மட்டுமே கல்வி பயின்று இருந்த நிலை இன்று மாறியுள்ளது. வந்த பாதையை மறக்காமல் இருந்தால் தான் வழித்தவறி போகாமலிருக்க முடியும். புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைப்பதில் Dravidian Stock ஆக நான் பெருமைப்படுகிறேன். பெருந்தலைவர் காமராஜர் பெயர்கொண்ட கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதை பெருமைக்குரியதாக கருதுகிறேன். காமராஜர் ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் ஏராளமான பள்ளிகள் திறக்கப்பட்டது. நாட்டிற்கே தமிழக அரசின் திட்டங்கள் தான் வழிகாட்டியாக உள்ளன.
2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் சொல்லப்படாத திட்டம் புதுமைப்பெண் திட்டம் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் படிக்கும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்களை பார்த்தேன். மேல்படிப்பு படிக்க திறமையும் மனசும் இருந்தாலும் பணம் இல்லாததால் படிப்பை கைவிடுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு வருத்தமடைந்தேன். அப்போதுதான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் எனும் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கினேன். இதனால் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 4,25 ஆயிரம் மாணவிகள் பயனடைந்து இருக்கிறார்கள் இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக 590 கோடியை 66 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இதை அரசுக்கு செலவினமாக கருதாமல் ஒரு தந்தைக்குரிய கடமையாக பெண் குழந்தைகளுடைய கல்விக்கான மூலதனமாக தான் பார்க்கிறேன்.
புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் திட்டத்தின் நோக்கம் நிறைவேற்றப்பட்டது பணமில்லாமல் படிப்பு நிறுத்திய பல்லாயிரக்கணக்கான மாணவியர் உயர் கல்வி கல்லூரிகளை நோக்கி வர தொடங்கி இருக்கிறார்கள். தற்போது அவர்கள் கல்லூரிக்குள் நுழைகிறார்கள் ஒரு ஆண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது கல்வி வளர்ச்சி அதுவே ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூகப் புரட்சி அந்த வகையில் புதுமைப்பெண் திட்டத்தால் தமிழ்நாட்டில் உயர்கல்வி முடிக்கின்ற பெண்களின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகமாக அறிவித்துடன் கூடும் திறமைசாலிகளில் அதிகமாக உருவாகுவார்கள் அதன் காரணமாக நம்முடைய தமிழ்நாட்டை தேடி உலகின் முன்னணி நிறுவனங்கள் தொழில் தொடங்க வருவார்கள். முக்கியமாக பாலின சமத்துவம் ஏற்படும் குழந்தை திருமணங்கள் குறையும் பெண்கள் அதிகாரம் பெறுவார்கள் பெண்களின் படிப்பால் அவர்களின் தலைமுறையே காக்கப்படும் இந்த ஒரு திட்டத்தால் எத்தனை பயன் கிடைக்கிறது கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்றார் புரட்சி கவிஞர் பாரதிதாசன், உயர் கல்வி பெறாத பெண்களை தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்காமல் ஓயமாட்டேன். எனக் கூறினார்