நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவு... ஆறுமுகனேரியில் பிரபல ரவுடி 'பாம்பே முருகன்' கைது!

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவு... ஆறுமுகனேரியில் பிரபல ரவுடி 'பாம்பே முருகன்' கைது!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆறுமுகனேரி காமராஜபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் முருகன் என்ற 'பாம்பே முருகன்' (49) மீது, ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட 7 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வழக்குகளின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இதையடுத்து ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் ரென்னீஸ் உத்தரவின்படி, உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆறுமுகனேரி கடைவீதியில் நடமாடிக் கொண்டிருந்த பாம்பே முருகனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாம்பே முருகனை காவல்துறையினர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.