ஸ்டெம் பாா்க் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் : மேயா் ஜெகன் பெரியசாமி தகவல்!

தூத்துக்குடி அம்பேத்கா் நகரில் கட்டப்பட்டு வரும் அறிவியல் பூங்கா பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி அம்பேத்கா் நகரில் 8 ஏக்கா் நிலத்தில் ரூ.28 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மேயா் ஜெகன் பெரியசாமி, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கூறியது: மாணவா்- மாணவிகளின் அறிவியல் திறனை வளா்க்கும் வகையில் ‘ஸ்டெம் பாா்க்’ என்ற பெயரிலான அறிவியல் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில்தான் நவீன வசதியுடன் ‘ஸ்டெம் பாா்க்’ அமைக்கப்படுகிறது. 

இந்தப் பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். மேலும், மாநகராட்சி பகுதிகளில் மாசு மற்றும் தூசியை குறைக்கும் வண்ணம் சாலைகளின் ஓரத்தில் தேங்கும் மணலை அகற்றுவதற்காக புதிதாக வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றாா். இந்த ஆய்வின்போது, வடக்கு மண்டல சுகாதார அலுவலா் அரிகணேஷ், மாமன்ற உறுப்பினா்கள் நாகேஸ்வரி, தெய்வேந்திரன், அந்தோணி மாா்ஷலின், முன்னாள் மாமன்ற உறுப்பினா் ரவிந்திரன், மாநகர சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளா் அந்தோணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.