முள்ளக்காடு அருகே டெய்லரிடம் பணம் கேட்டு மிரட்டிய இளஞ்சிறார் உட்பட இருவர் கைது!

முள்ளக்காடு அருகே உள்ள பொட்டல்காடு விளக்கு பகுதியில் டெய்லரிடம் பணம் கேட்டு மிரட்டிய இளஞ்சிறார் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையா புரம் அருகே உள்ள அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவர் டெய்லரிங் வேலை செய்து வருகிறார். இவர் வேலை தொடர்பாக முள்ளக் காடு அருகே உள்ள பொட்டல்காடு விளக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது முத்தையா புரம் தங்கம்மாள் புரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் ( வயது 20) , அதே பகுதியை சேர்ந்த இளஞ்சிறார் சேர்ந்து ஆறுமுகத்தை வழி மறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் முத்தையா புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.