கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை தாக்கியவர்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்திட நீதிமன்றம் உத்தரவு!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை தாக்கியவர்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்திட நீதிமன்றம் உத்தரவு!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை தாக்கியவர்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்திட நீதிமன்றம் உத்தரவு!

தெய்வச்செயல்புரம் நிலமோசடி புகார் விவகாரத்தில் சிபிஎம் தலைவர்களை தாக்கிய குற்றவாளிகள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்திட சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் வருவாய் கிராமத்தில் விவசாயிகளுக்கு சொந்தமான 915 ஏக்கர் நிலத்தை மோசடி ஆவணங்களை தயாரித்து அபகரிக்க முயன்ற நிலமோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல கட்ட போராட்டங்களை பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் சேர்ந்து நடத்தியது. 

இதனால் ஆத்திரமடைந்த நிலமோசடி கும்பல் முன்னாள் மாவட்ட செயலாளர் க.கனகராஜ் வீட்டின் மீது 06.01.2012 அன்று இரவு பெட்ரோல் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். தீவிரமான புலன் விசாரணைக்கு பிறகு பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்தனர். 

அவர்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினராக உள்ள டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபுவும் அவரது கூட்டாளிகளும் ஈடுபட்டிருப்பதாக சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பான மனு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிபிஎம் சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.ஷாஜிசெல்லன், இ.சுப்புமுத்துராமலிங்கம், டி.சீனிவாசராகவன் ஆகியோர் ஆஜராகினர். நீதிமன்றம் சிபிசிஐடி போலீசார் இரண்டு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திட வேண்டும் என உத்தரவிட்டது.

எனவே இந்த வெடிகுண்டு வீச்சு வழக்கில் சம்பந்தப்பட்ட நில மோசடி கும்பல் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச்சென்று விடாதவாறு முறையாக விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.