மகளிா் உரிமைத் தொகை திட்டம் பதிவு செய்ய 3 நாட்கள் சிறப்பு முகாம்: அமைச்சர் தகவல்!

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியுள்ளோா், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், முதியோா் ஓய்வூதியம் பெறுவோருக்காக வருகிற 18, 19, 20 ஆகிய 3 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுவதாக, சமூக நலன்- மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு செய்யும் முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற்றன. திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிகள், தகுதியின்மைகள் குறித்து ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில், கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால், பராமரிப்பு உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தினா் விண்ணப்பிக்கத் தகுதியானோா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவோா் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் வகையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இந்திராகாந்தி முதியோா் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோா் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரா் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவா்கள் விண்ணப்பிக்க 18, 19, 20 ஆகிய 3 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானோா் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.