தமிழகத்தில் முதல் முறையாக கிராம உதவியாளர் பணிக்கு தேர்ச்சி பெற்ற தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை..!

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணை வழங்கினார்.

தமிழகத்தில் முதல் முறையாக  கிராம உதவியாளர் பணிக்கு தேர்ச்சி பெற்ற தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை..!

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணை வழங்கினார்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடத்தப்பட்ட கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்று எட்டயபுரம் வட்டம் மேலக்கரந்தை கிராம உதவியாளராக தமிழகத்திலே முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை. ஸ்ருதி என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ் அவர்கள் இன்று ஜனவரி 13 ஆம் தேதி பணிநியமன ஆணையினை வழங்கினார்.

இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ,மாவட்ட வருவாய் அலுவலர் (பொ)திருமதி.மாரிமுத்து ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது திருமதி.அமுதா ஆகியோர் உடன் இருந்தனர்.