கோவில்பட்டி அருகே பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த ஒருவர் கைது -3 மூடை தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

கோவில்பட்டி அருகே பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த ஒருவர் கைது -3 மூடை தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

கோவில்பட்டி அருகே பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த ஒருவர் கைது -3 மூடை தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் மெயின் ரோட்டில் உள்ள பெட்டிகடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யபடுவதாக கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதனுக்கு ப தகவல் கிடைத்துள்ளது. இதையெடுத்து தனிப்படை உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் அருண் சுரேஷ் ஆகியோர் சோதனை செய்த போது அந்த பெட்டிக்கடையில் தமிழக அரசினால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ; தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த கருப்பசாமியை கைது செய்த போலீசார் 3 மூடை தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்ளை பறிமுதல் செய்து நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.