சாத்தான்குளம் அருகே பைக்கில் சென்றபோது சேலை சக்கரத்தில் சிக்கி விபத்து: பெண் உயிரிழப்பு..!

சாத்தான்குளம் அருகே  பைக்கில் சென்றபோது சேலை சக்கரத்தில் சிக்கி விபத்து:  பெண் உயிரிழப்பு..!

சாத்தான்குளம் அருகே பைக்கில் மகனுடன் சென்றபோது தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கால்வாய் திருவரங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் இவரது மனைவி ஜெபசெல்வி (53) இவர் சர்க்கரை நோய் பரிசோதனை செய்வதற்காக தனது மகன் டேவிட் அந்தோணி (24) என்பவருடன் பைக்கின் பின்னால் அமர்ந்து பேய்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார் 

பழனியப்பபுரம்  ரோட்டில் சென்றபோது ஜெப செல்வியின் சேலை பைக் சக்கரத்தில் சிக்கி அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்.