பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு பேரணி!

பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு பேரணி!

ஆத்தூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன் அவர்கள் தலைமை வகித்தார் மற்றும் ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா வின் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி ஜெயா அவர்கள் ஆத்தூர் பகுதியை சார்ந்த மறுசுழற்சி பாதுகாவலராகலோடு கலந்து கொண்டனர்.

இதில் பிளாஸ்டிக் தவிர்ப்பது மற்றும் மஞ்சப்பை பயன்படுத்துவது தொடர்பான கோஷங்கள் பயன்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மறுசுழற்சி பாதுகாவலர்கள் பொதுமக்களிடம் திரு.கமால்தீன் அவர்களின் தலைமையில் மஞ்சப்பை பயன்பாடு குறித்து பேசி மஞ்சப்பை வழங்கினார்கள் .

              ஆத்தூர் பேரூராட்சி ஆபிஸ் முன்பு துவங்கி பஸ் நிலையம் மெயின் ரோடு வழியே தனியார் ஆஸ்பத்திரி வரை நடந்த இந்த பேரணியில் கவுன்சிலர்கள் அசோக்குமார் ,சிவா , முத்து , கோமதி, மற்றும் பேரூராட்சியின் பணியாளர்களும் கலந்து கொண்டனர் .