முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி வருகை: திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு !
தூத்துக்குடியில் முக்கிய சாலைகள், காய்கறி மார்க்கெட்டில் நடந்து சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து வாக்கு சேகாித்தாா்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சிந்தலக்கரையில் பிரச்சாரம் செய்கிறார். முன்னதாக அவர் சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். இரவில் தனியார் ஓட்டலில் ஓய்வெடுத்தார்.
இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடியில் தமிழ் சாலையில் நடைபெயிற்சி சென்றார். மேலும் அவர் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று வியாபாரிகள், பொதுமக்களுடன் கலந்துரையாடி திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். பின்னர் முக்கிய சாலைகள் வழியாக பொதுமக்களிடம் தனது கையை உதயசூாியன் வடிவில் காண்பித்தும் கும்பிட்டும் வாக்குகளை சேகாித்து சென்றார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயா் ஜெகன் பொியசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, ஓன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், மாநகர அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், துணை அமைப்பாளர்கள் மகேஸ்வரன் சிங் பரமசிவன், பால்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
மூதாட்டிக்கு உதவிய முதல்வர் ஸ்டாலின்!
தூத்துக்குடி இன்று அதிகாலையில் காய்கறி சந்தையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பாரதிநகரை சேர்ந்த மேரி என்ற மூதாட்டி சந்தையில் வைத்து தான் காய்கறி வாங்க கொண்டு வந்த பணம் ரூ.1500 தொலைந்து விட்டதாக முதல்வரிடம் கூறினார். அவருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் உடனடியாக தி.மு.க சார்பில் ரூ.2000 வழங்கி மூதாட்டிக்கு உதவிசெய்தார்.
இன்று மாலை 5 மணிக்கு எட்டயபுரம் அருகே உள்ள கனிமொழி, ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.