“தூத்துக்குடி மாநகராட்சியில் முதல்வர் படம் புறக்கணிப்பா..? மன்ற கூட்டத்தில் ஜோசப் விஜய் புகைப்படம் இல்லாததால் அரசியல் சர்ச்சை!”

“தூத்துக்குடி மாநகராட்சியில் முதல்வர் படம் புறக்கணிப்பா..? மன்ற கூட்டத்தில் ஜோசப் விஜய் புகைப்படம் இல்லாததால் அரசியல் சர்ச்சை!”

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் புகைப்படம் இடம்பெறாதது அரசியல் வட்டாரங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று மாதங்களுக்கு பிறகு மே 27ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில், மாமன்ற அரங்கின் பெயர் பலகை அருகே எந்த அரசியல் தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெறவில்லை. கடந்த கூட்டங்களில் முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இருந்த நிலையில், இம்முறை அனைத்துப் புகைப்படங்களும் அகற்றப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது.

குறிப்பாக தற்போதைய முதல்வர் ஜோசப் விஜயின் புகைப்படம் இடம்பெறாதது குறித்து, “வேண்டும் என்றே முதல்வர் படம் புறக்கணிக்கப்பட்டதா..?” என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்காததால் சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது. இது சாதாரண நிர்வாக மாற்றமா? அல்லது அரசியல் பின்னணி கொண்ட நடவடிக்கையா? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது.

இந்த சம்பவம் தூத்துக்குடி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், பொதுமக்களிடையிலும் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.