தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.19.93 கோடிக்கு பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 01.04.2025 முதல் 14.08.2025 வரை ரூ.19.93 கோடிக்கு 1105 விவசாயிகளுக்கு விவசாய பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது "தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுநாள் வரை 201.93 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. பாபநாசம் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 1165.127 கன அடியாக உள்ளது. நீர்தேக்கத்திலிருந்து வெளியேறும் அளவு 1750 கன அடியாக உள்ளது.
தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 112.486 மெ.டன்;, உளுந்து 223.72 மெ.டன்;, கம்பு 13.562 மெ.டன்;, பாசிப்பயறு 6.139 மெ.டன்;, சோளம் 1 மெ.டன்;, இருப்பு வைக்கப்பட்டுள்ளது. திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2024-25ஆம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 140847 ர்ய ராபி பருவ பயிர்களுக்கு 104446 விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது உளுந்து பயிறுக்கு 2.91 கோடி மற்றும் பாசி பயிறுக்கு 1.69 கோடி விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனத்தால் விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது பிற பயிர்களுக்குரிய விபரங்கள் தொடர்ந்து அரசுக்கு அனுப்பப்பட்டு உரிய காப்பீடு தொகை தகுதியான விவசாயிகளுக்கு அதிவிரைவில் கிடைக்கப்பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்- தோட்டக்கலைத்துறை: தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி 2023-24ம் வருடத்திற்கான பயிர்காப்பீடு இழப்பீடுதொகை நிவாரணமாக பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு வாழை பயிருக்கு ரூ.0.41 கோடி, கொத்தமல்லி பயிருக்கு ரூ.1.94 கோடி, வெங்காய பயிருக்கு ரூ.21.32 கோடி மற்றும் சிவப்பு மிளகாய் பயிருக்கு ரூ.46.25 கோடி ஆக மொத்தம் ரூ.69.76 கோடி இழப்பீட்டுத் தொகையானது 31656 விவசாயிகளுக்கு இப்கோ டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தால் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எஸ்க்ரோ மூலம் பெறப்பட்ட மீதமுள்ள வாழை, கொத்;தமல்லி, வெங்காயம் மற்றும் சிகப்பு மிளகாய் பயிர்களுக்கான ரூ.13.83 இலட்சம் தொகையினை விவசாயிகளுக்கு விடுவிக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2024-25 ஆண்டிற்குரிய சிவப்பு மிளகாய், வெங்காயம் மற்றும் கொத்தமல்லிக்கான பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிவுற்ற நிலையில் கொத்த மல்லி பயிருக்கு மொத்த தொகை ரூ.30.43இலட்சத்தில் 1.64 இலட்சம் விடுவிக்கப்பட்டு மீதி தொகை ரூ.28.78 இலட்சம் விடுவிக்கப்படும் நடைமுறையில் உள்ளது. வெங்காயப் பயிருக்கு மொத்த தொகை ரூ.33.70இலட்சத்தில் 2.26 இலட்சம் விடுவிக்கப்பட்டு மீதி தொகை ரூ.31.41 இலட்சம் விடுவிக்கப்படும் நடைமுறையில் உள்ளது. மேலும் உரிய காப்பீடு தொகை தகுதியான விவசாயிகளுக்கு விரைவில் கிடைக்கப்பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
2025-26 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்: 2025-26 ஆம் ஆண்டில்; 80 கிராம பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்கான இலக்கு வரப்பெற்றுள்ளது. பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட் வழங்கும் திட்டம் 2025-26ம் நிதியாண்டில் 20 எண்கள் ரூ.3.00 இலட்சம் மானியம் ஒதுக்கீடு வரப்பெற்று, 7 எண்களுக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டு, 5 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் அமைத்து அல்லது பதிவு செய்து மும்முனை மின் இணைப்பு வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் மொத்த தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மானியம் பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கூட்டுறவுவங்கிகள் மூலம் குறுகியகால மற்றும் மத்தியகால கடன்கள் : தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்கள் மூலம் 31.03.2025 வரை ரூ.263.50 கோடிக்கு 22463 விவசாயிகளுக்கு விவசாய பயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 16485 சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.194.77கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது.மேலும் 01.04.2025 முதல் 14.08.2025 வரை ரூ.19.93 கோடிக்கு 1105 விவசாயிகளுக்கு விவசாய பயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 811 சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.14.69 கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைத்துறை) (பொ) சிவசுப்பிரமணியன், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, செயற்பொறியாளர் (கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) தங்கராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ் சௌமியன், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.