ஸ்ரீவைகுண்டம் அருகே வாரிசு இல்லாத ஏக்கத்தில் மூத்த‌ தம்பதி விஷம் குடித்து தற்கொலை!

ஸ்ரீவைகுண்டம் அருகே வாரிசு இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்த வயதான தம்பதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லநாடு மருத்துவர் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 75) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி இசக்கியம்மாள் (70). இவர்களுக்கு குழந்தை இல்லை. இசக்கியம்மாள் கடந்த 3 வருடங்களாக நடக்க முடியாமல் வீட்டில் அவதிப்பட்டு வந்தார். அவரை கணவர் அருணாச்சலம் தான் கவனித்து வந்தார்.

இதற்கிடையே வயதாகிவிட்ட காரணத்தால் தங்களை கவனித்துக் கொள்ள வாரிசு இல்லையே என்று தம்பதியினர் மன வேதனையில் இருந்தனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த இருவரும் கடந்த 27-ந் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் இசக்கியம்மாள் பரிதாபமாக இறந்தார். பின்னர் மாலையில் அவரது கணவர் அருணாச்சலமும் சிகிச்சை பலனின்றி இறந்தார். தங்களுக்கு வாரிசு இல்லாததால் மனவேதனையில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.