தூத்துக்குடி ரேஷன் கடையில் அதிரடி சோதனை! 22 கிலோ அரசு அரிசி பதுக்கல் கண்டுபிடிப்பு – அமைச்சர் ஸ்ரீநாத் நடவடிக்கை உத்தரவு!

தூத்துக்குடி ரேஷன் கடையில் அதிரடி சோதனை! 22 கிலோ அரசு அரிசி பதுக்கல் கண்டுபிடிப்பு – அமைச்சர் ஸ்ரீநாத் நடவடிக்கை உத்தரவு!

தூத்துக்குடி தருவை மைதானம், காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடையில் முறைகேடு நடைபெறுவதாக வந்த புகாரின் பேரில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அங்குள்ள ரேஷன் கடையில் 22 கிலோ அளவிலான அரசு வழங்கும் அரிசி முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இது பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அத்தியாவசிய பொருட்களை தவறாக கையாடல் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஸ்ரீநாத் உடனடியாக உத்தரவிட்டார். மேலும், ரேஷன் கடைகளில் நடைபெறும் விநியோக செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.