மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண தோ்வு நாள் மாற்றம்: ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில், டிச. 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த மின் கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிச. 27, 28 தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிச. 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த நிலையில், நிா்வாக காரணங்களால் தற்போது இத் தோ்வு டிச. 27, 28 ஆகிய தேதிக்கு மாற்றப்பட்டது. விண்ணப்பதாரா்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தோ்வு தொடா்பான விவரங்கள், தோ்வு நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.