தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது : ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்மாதிரி விருது பெற திருநங்கையர் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது : ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்மாதிரி விருது பெற திருநங்கையர் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: 2022-23-ம் ஆண்டில் திருநங்கைளுக்கான முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ந் தேதி வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது ஆகிய தகுதிகளை பெற்று இருக்க வேண்டும். இந்த தகுதிகளை உடைய திருநங்கைகள் awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் வருகிற 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 

இணையதளத்தில் விண்ணப்பிப்பவர்கள், புத்தக வடிவ கருத்துருவை மாவட்ட சமூகநல அலுவலகத்திலும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், சுயசரிதை, தன்னை பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்), விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயர், யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்), சேவை பற்றிய செயல் முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவையைப் பாராட்டி பத்திரிகை செய்திக்குறிப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதுமில்லை என்பதற்கான சான்று, சமூக சேவையாளரின், சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.