தூத்துக்குடி டோல்கேட்டில் தீவிபத்து : ஆம்புலன்ஸ் எரிந்து சேதம்!

தூத்துக்குடி டோல்கேட்டில் தீவிபத்து : ஆம்புலன்ஸ் எரிந்து சேதம்!

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் நிறுத்தியிருந்த ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் கிராமத்தில் மதுரை நெடுஞ்சாலையில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டோல்கேட் அலுவலக வளாகத்தில் நான்கு வழிச்சாலைகளில் விபத்துக்களில் சிக்கும் நபர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இன்று மாலை 4.30 மணி அளிவில் திடீரென ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயை அனைக்க முயன்றனர். பின்னர், தீயணைப்புத் துறையினரின் அதிரடி நடவடிக்கையால் தீ அணைக்கப்பட்டது. இது குறித்த முதற்கட்ட விசாரனையில், ஆம்புலன்ஸ் உள்ளே வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஸன் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த டோல்கேட் சமீப காலமாக பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வருவதாக ஏற்கனவே வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வந்தனர். தற்போது நடந்த சம்பவம் சரியான பராமரிப்பு இன்றி சிலிண்டர் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டோல்கேட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் போதிய பாதுகாப்பற்ற நிலை நீடிப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் இவ்விசயத்தில் தலையிட்டு டோல்கேட் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.