வீட்டில் உணவு பாதுகாப்பு - தினம் ஒரு தகவல்... இன்றைய தலைப்பு: முட்டை!
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் திரு.மாரியப்பன் அவர்களுக்கு நன்றி. தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்து தினம் ஒரு தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. அதனை செய்தி வடிவில் நாம் வழங்கி வருகிறோம், இன்றைய உணவு பாதுகாப்பு குறித்த தகவலை வாங்க அறிந்து கொள்ளலாம்...
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் திரு.மாரியப்பன் அவர்களுக்கு நன்றி. தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்து தினம் ஒரு தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. அதனை செய்தி வடிவில் நாம் வழங்கி வருகிறோம், இன்றைய உணவு பாதுகாப்பு குறித்த தகவலை வாங்க அறிந்து கொள்ளலாம்...
இன்றைய தலைப்பு: முட்டை
சமீப காலங்களில் முட்டை என்பது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாத அல்லது தவிர்க்கப்படாத உணவுப் பொருளாகிவிட்டது. ஒரு நபர் தினம் அரை முட்டை அளவாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவிக்கின்றது. அப்படியான ஊட்டச்சத்துமிக்க முட்டை குறித்து தான் எத்தனை நம்பிக்கைகள், எத்தனை கட்டுக்கதைகள்..! எனவே, சந்தையில் கிடைக்கின்ற முட்டை மற்றும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தொடர்ந்து பார்ப்போம். (ப்ளாஸ்டிக் முட்டை பரப்புரை உட்பட..!)
100 கிராம் முட்டையில் 12-13 கிராம் புரதச்சத்தும் 10-11 கிராம் கொழுப்புச் சத்தும் உள்ளது. அது போக, குறிப்பிட்ட அளவில் நுண்ணூட்டச் சத்துக்களான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. எனவே, குழந்தைகளுக்கு தினம் ஒரு முட்டை கொடுங்கள். இந்த ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தினால்தான், அரசும் சத்துணவில் மாணவச் செல்வங்களுக்கு முட்டை வழங்குகின்றது.
- முட்டையை கடையில் வாங்கும் போது, முட்டை ஓட்டில் கீறல் விழுந்திருந்தாலோ அல்லது சிறிதாக உடைந்திருந்தாலோ வாங்கக்கூடாது.
- முட்டையில் அதிக அளவில் அழுக்கு அல்லது கோழி எச்சம் படிந்திருந்தாலும் வாங்கக்கூடாது.
- முட்டையை வாங்கி வீட்டிற்கு வந்தவுடன், அது கெட்டுப்போனதா இல்லையா என்பதை கண்டறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, முட்டையை அதனுள் வைத்து சோதித்துப் பார்க்கலாம்.
- அ: முட்டை மிதக்காமல், பாத்திரத்துடன் ஒட்டி அமிழ்ந்திருந்தால், அது நல்ல நிலையில் உள்ளது என்று பொருள். இந்த முட்டைகளை கிருமி நீக்கம் செய்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கலாம்.
- ஆ: ஒரு வேளை தண்ணீரில் முட்டை மிதந்தால், அது கெட்டுப்போன முட்டையாகும். அந்த முட்டையை வாங்கிய வணிகரிடமே அதன் விபரத்தைத் தெரிவித்து, அதை அவர் முன்னரே அழித்துவிடுங்கள்.
- இ: ஆனால், முட்டை மிதக்காமல், பாத்திரத்துடன் ஒட்டிக்கொண்டு , நிமிர்ந்து நின்றால், அந்த முட்டையானது காலாவதியாக ஆரம்பித்துள்ளது என்று பொருள். இந்த வகை முட்டையை உடனே சமைத்திடுதல் நலம்.
- அறை வெப்பநிலையில் (30 டிகிரி செல்சியஸ் வரை) புதிய முட்டை 10-12 நாட்கள் வரை தாங்கும். வெப்பநிலை அதிகமாக அதிகமாக முட்டையின் வாழ்நாள் குறுகும். நமது இடத்தின் வெப்பநிலை சற்று கூடுதலாக இருப்பதால், நாம் முட்டையை வாங்கி வந்த 2-3 தினங்களுக்குள் சமைத்து சாப்பிடுவது நலம்.
- முட்டையை கிருமிநீக்கம் செய்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் நான்கு வாரங்கள் கூட தாங்கும். ஆனால், நாளாக நாளாக அதன் தரம் குறைய வாய்ப்புள்ளது.
- ஏற்கனவே பொட்டலமிட்டு சீலிட்டு, காலாவதி தேதியுடன் வரும் முட்டைகளை, அந்த நாளிற்குள் சமைத்துவிட வேண்டும்.
நாளை…..முட்டையை எப்படி கிருமிநீக்கம் செய்வது என்பது குறித்தான தகவல் பகிரப்படும்..!
நன்றி:டாக்டர்.ச.மாரியப்பன், எம்.பி.பி.எஸ்., எம்.பி.எச்.,
நியமன அலுவலர்,உணவு பாதுகாப்புத் துறை,
தூத்துக்குடி மாவட்டம்.
For complaints: 9444042322
++++++++++++++++++++++++++++++
எங்களது வாட்ஸ் ஆப் குழுவில் இனைய...