தூய்மை காவலர்களுக்கு மாத, வார விடுமுறை வழங்க வேண்டும் : ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் தீர்மானம்!

தூய்மை காவலர்களுக்கு மாத, வார விடுமுறை வழங்க வேண்டும் : ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் தீர்மானம்!

தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் 7வது ஆண்டு பேரவைக் கூட்டம் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. 

மாவட்டத்தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் வேல்முத்து வரவேற்புரை ஆற்றினார். சிஐடியு மாவட்டத்தலைவர் இரா.பேச்சிமுத்து, மாவட்ட பொருளாளர் அப்பாத்துரை, சங்க மாவட்ட பொதுச்செயலாளர் முனியசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சங்கத்தின் மாவட்ட தலைவராக வி கருப்பசாமி, பொதுச் செயலாளராக த.முனியசாமி, பொருளாளராக எம்.வேல் முத்து சங்க துணை நிர்வாகிகளாக இல.ராமமூர்த்தி, அ.மந்திரமூர்த்தி, ஜெ.செல்வராஜ், பி.பத்திரகாளி, எம்.கருப்பி, ஜி.ராமர், எஸ்.காளிமுத்து, பி.கணேசன், பி.காளிமுத்து, கே.சந்தனம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சிஐடியு ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முருகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் கே.காசி, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி சி ரவிச்சந்திரன், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கிராமப்புற தூய்மை காவலர்களுக்கு மாதம் 10,000 வழங்கிடவும், கொரானா கால ஊக்கத் தொகை 15,000 வழங்கிடவும், தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் ரூ.10,000 வழங்கிடவும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பி.எப். இ எஸ் ஐ பிடித்தம் செய்யவும், பண்டிகை விடுமுறை, வார விடுமுறை சம்பளத்துடன் வழங்கிடவும், பொங்கல் போனஸ் ஒரு மாத ஊதியம் வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.