முத்தையாபுரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு!!

முத்தையாபுரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு!!

முத்தையாபுரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு!!

முத்தையாபுரம் அருகே காட்டு பகுதியில் உயிரிழந்த மயிலை பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெரு பகுதியில் உள்ள காட்டு பகுதியில் மயில் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள்  முத்தையாபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்னர். பின்னர் அங்கு வந்த முத்தையாபுரம் காவல்துறையினர்  தூத்துக்குடி மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

பின்னர் அங்கு வனத்துறை அதிகாரிகள் மயில் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதற் கட்ட விசாரணையில்  மயில் அங்கிருந்த உயர் மின் அழுத்த வயரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.