காற்றாலை நிறுவனத்தை கண்டித்து போராட்டம்: ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு!

விளாத்திகுளம் அருகே கே.குமரெட்டையாபுரத்தில் காற்றாலை நிறுவனத்தை கண்டித்து ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் திருப்பி வழங்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா்.

காற்றாலை நிறுவனத்தை கண்டித்து போராட்டம்: ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு!

விளாத்திகுளம் அருகே கே.குமரெட்டையாபுரத்தில் காற்றாலை நிறுவனத்தை கண்டித்து ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் திருப்பி வழங்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜே.எஸ். டபிள்யூ என்ற தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் பல்வேறு இடங்களில் காற்றாலை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது விளாத்திகுளம் அருகே உள்ள கே. குமரெட்டையாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கே. குமரெட்டையாபுரம் கிராமத்தில் காற்றாலை மின்விசிறி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதற்காக கிராமத்தின் குடியிருப்பு வழியாக உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்வதற்காக மின்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பாக 3 ஆம் தேதி கிராமத்தை விட்டு ஊரணியில் குடியேறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அரசு அலுவலர்களோடு நடந்த பேச்சுவார்த்தையில் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து சமாதான கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.

மார்ச் 8ஆம் தேதி விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து தனியார் காற்றாலை நிறுவனம் அதிகாாிகள் மற்றும் கே.குமரட்டையாபுரம் கிராம பொதுமக்களும் கலந்து கொண்ட சமாதான கூட்டம் நடைபெற்றது. சமாதான கூட்டத்தில் முடிவில் எந்த முடிவு எட்டப்படாததால் கே. குமரட்டையாபுரம் கிராம பொதுமக்கள் தங்களது ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் திரும்பி வழங்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை கே.குமரட்டையாபுரம் கிராம பொதுமக்கள் தங்கள் வீடுகள் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் மற்றும் ரேஷன் கார்டுகளை கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் திரும்பி வழங்க உள்ளனர். 

இதுகுறித்து கே.குமரட்டையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரா ராமலிங்கம் கூறுகையில் : எங்களது கிராமத்தைச் சுற்றிலும் தனியார் காற்றாலை நிறுவனம் காற்றாலை மின்விசிறி அமைத்துள்ளது இதற்காக எங்களது கிராமத்தில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதி வழியாக உயர் அழுத்த மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வகையில் போராட்டம் நடத்துகிறோம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 

தொடர்ந்து தனியார் காற்றாலை நிறுவனம் பொது மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் உயர் அழுத்தம் மின்கமங்களை ஊருக்குள் அமைத்து வருகின்றனர் இந்த உயர் அழுத்தம் இன்கம் பார்த்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஊருக்குள் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழல் இல்லை எனவே கிராம மக்கள் அனைவரும் தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை அரசு அலுவலகத்தில் திருப்பி வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.