தூத்துக்குடியில் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம்: மே 3ம் தேதி தொடங்குகிறது!!

தூத்துக்குடியில் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம்: மே 3ம் தேதி தொடங்குகிறது!!

தூத்துக்குடி அறிவியல் பூங்காவில் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் மே 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற உள்ளது

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியின் இணைந்த பணிக்கூட்டமைப்பில், மாணவர்கள் விடுமுறையை பயனுள்ள அறிவுப் பயணமாக மாற்றும் நோக்கத்தில், ‘ஏனென்று கேள்’ எனும் தலைப்பில் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் வருகிற மே 3ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை, தூத்துக்குடி மாநகராட்சியின் அறிவியல் பூங்கா (STEM Park) வளாகத்தில் நடைபெற உள்ளது

மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் இதில் முற்றிலும் இலவசமாக பங்கேற்கலாம். தினமும் மாலை 3 மணி முதல் 7 மணி வரை, மாணவர்களின் அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், வகுப்புகளும் செய்முறை பயிற்சிகளும் நடைபெற உள்ளன.

முகாமின் முதற்கட்டமாக, பின்வரும் தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெறும்:

கணக்கும் இனிக்கும்

கைகளில் கண்ணாம் பூச்சி

அறிவியல் பரிசோதனைகள்

ஒரிகமி

கற்பனையும் கைத்திறனும்

பொம்மலாட்டம்

பலூனில் பொம்மைகள்

மந்திரமா தந்திரமா

அறிவியல் கோமாளி

அறிவியல் ஆனந்தம்.

கதை சொல்வோம், கதை உருவாக்குவோம்

விளையாட்டை கற்போம்

நம்புவீர்களா?

மேலும், சதுரங்க பயிற்சி தினமும் மாலை 5.30 முதல் 6.30 மணி வரை சிறந்த பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலுடன் நடத்தப்படும். இதற்குப் புறமாக, அறிவியல் பூங்காவில் உள்ள அனைத்து அறிவியல் சாதனங்கள் பற்றிய விளக்கங்கள், தினசரி அறிவியல் வல்லுனர்களால் வழங்கப்படும். மாணவர்களில் "ஏன்?” என்ற கேள்வி எழும் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இம்முகாம் செயல்படுத்தப்படுகிறது.

வாராந்திர சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை, அறிவியல் மற்றும் குழந்தைகள் விரும்பும் திரைப்படங்கள் மினி திரை காட்சி முறையில் திரையிடப்பட்டு, அதனைத் தொடர்ந்து Film Critics மாணவர்களிடம் படத்தின் அறிவியல் சார்ந்த உள்ளடக்கங்களை விளக்கி உரையாற்ற உள்ளனர்.

பெற்றோர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் அறிவியல் திறனையும், ஆர்வத்தையும் ஊக்குவிக்கச் செய்வது, அவர்களது எதிர்கால அறிவியல் பயணத்திற்கு ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.

முன்பதிவிற்காக, கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது அறிவியல் பூங்கா (STEM Park) நேரில் சென்று பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு +91 95976 13988‬ / ‪+91 82207 50082‬ என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.