தொகுதி எண்ணிக்கை சிக்கல் உச்சக்கட்டம்! இன்று மீண்டும் ஸ்டாலினை சந்திக்கும் சிபிஎம் – முக்கிய முடிவு காத்திருக்கிறது!

தொகுதி எண்ணிக்கை சிக்கல் உச்சக்கட்டம்! இன்று மீண்டும் ஸ்டாலினை சந்திக்கும் சிபிஎம் – முக்கிய முடிவு காத்திருக்கிறது!

தொகுதி எண்ணிக்கை தொடர்பாக மீண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப்பேச முடிவெடுத்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் திங்களன்று (மார்ச் 23) கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், “இந்தக்கூட்டத்தில் நேற்றைய தினம் (மார்ச் 22) தொகுதி எண்ணிக்கை சம்பந்தமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மீண்டும் இன்று திமுக தலைவரை நேரடியாக சந்தித்து அது குறித்து பேசி முடிவெடுப்பது என்று தீர்மானித்துள்ளோம்” என்றார்,

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தொகுதி எண்ணிக்கை சம்பந்தமாக இன்று திமுக தலைவரை சந்தித்து அதன் முடிவை ஊடகங்களுக்கு தெரிவிப்போம் என்றார்.

இந்த சந்திப்பின்போது மாநிலச்செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் உடனிருந்தார்