தேர்தல் நேரத்தில் வங்கிகளில் பண பரிவர்த்தனை கடும் கண்காணிப்பு – 20க்கும் மேற்பட்ட அரசு அமைப்புகள் கண்காணிப்பு!

தேர்தல் நேரத்தில் வங்கிகளில் பண பரிவர்த்தனை கடும் கண்காணிப்பு – 20க்கும் மேற்பட்ட அரசு அமைப்புகள் கண்காணிப்பு!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் பணியில் 20க்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15, 2026 அன்று தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

முறையற்ற பண பரிவர்த்தனைகளைத் தடுக்க வருமான வரித்துறை, காவல்துறை, CGST, CISF உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வங்கிகள் தினசரி பண பரிவர்த்தனைகள் மற்றும் ATM பணம் கொண்டு செல்லும் வாகனங்கள் குறித்து தேர்தல் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.