தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026: பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் தேவை – தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026: பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் தேவை – தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் போது பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தும் நோக்கில், முப்படையைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதிற்குட்பட்ட முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் (JCOs) மற்றும் இதர தரவரிசை முன்னாள் படைவீரர்கள் (OR) விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் தங்களது படைவிலகல் சான்று (Discharge Book) மற்றும் அடையாள அட்டையுடன் தூத்துக்குடியில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு, உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் எனவும், மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்பாகவும், தேர்தல் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.