தூத்துக்குடி மாநகராட்சி படிப்பகத்தில் படித்த 10 பேர் அரசு பணிக்கு தேர்வு: மேயர் ஜெகன் வாழ்த்து!

தூத்துக்குடி மாநகராட்சி படிப்பகத்தில் படித்த 10 பேர் அரசு பணிக்கு தேர்வு: மேயர் ஜெகன் வாழ்த்து!

தூத்துக்குடியில் மாநகராட்சி படிப்பகத்தில் படித்து அரசு பணிக்கு தேர்வான 10பேருக்கு மேயர் ஜெகன் வாழ்த்து தெரிவித்தார். 

தூத்துக்குடியில் பாளை ரோட்டில் உள்ள ஒரு பூங்காவை மாற்றம் செய்து மாநகராட்சி சார்பில் படிப்பகம் அமைக்கப்பட்டது. இங்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புக்கான புத்தகங்களை இலவசமாக படித்து வருகின்றனர். இந்தப் படிப்பகத்தால் நிறைய பேர் பயனடைகின்றனர் என்று முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு மேயர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை பாராட்டினார். 

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மேயர் ஜெகன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தின் பின்புறம் மீண்டும் ஒரு படிப்பகம் கணினி வசதியுடன் அமைக்கப்பட்டது. அங்கும் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்தப் படிப்பகத்தை கூட்டுறவு வேலை வாய்ப்பு தொடர்பான புத்தகங்கள் வெளியே கிடைக்க வாய்ப்பு குறைவு இங்கு கிடைப்பது நிறைய பேருக்கு பயன் உள்ளதாக இருந்தது. 

இந்த நிலையில் மாநகராட்சி படிப்பகத்தில் படித்த 10 பேர் குரூப் 4 தேர்வு எழுதப்பட்டு தேர்ச்சி பெற்று அரசு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 10 பேரையும் மாநகராட்சி நிர்வாகம் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் அரசு பணியில் சேர்ந்தபத்து பேரையும் மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் பாராட்டி உள்ளார். 

குரூப் 4 மூலம் மாநகராட்சி படிப்பகத்தில் படித்த நிசோக்குமார், பேச்சி பொன்துனர, அரவிந்த், கோகுல லட்சுமி, ஆனந்தபாபு, நரேஷ். அருண்குமார். லோகேஷ், ஆனந்தவல்லி, பிரவினா உள்பட 10 பேர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் எல்லாம் ரூரல் டெவலப்மெண்ட், வேளாண்மை துறை, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம். வருமான வரித்துறை, வருவாய்த்துறை ஆகிய அரசு பணிகளில் 10 பேரும் பணியில் சேர்ந்துள்ளனர். 

இது பற்றி மாநகராட்சி மேயர் ஜெகன் தெரிவிக்கையில் மாநகராட்சி படிப்பகம் தமிழக முதலமைச்சரின் ஆலோசனையின் படி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நினைத்தபடி உள்ளாட்சித் துறை அமைச்சர் கேஎன் நேரு அனுமதி உடன் இரண்டு படிப்பகம் அமைக்கப்பட்டு தினசரி 200க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் படிப்பகத்தில் படித்து வருகின்றனர். 

மாநகராட்சி படிப்பகத்தில் படித்த 10 பேர் குரூப் 4 மூலம் தேர்ச்சி பெற்று வெவ்வேறு அரசுத்துறை பணிகளுக்கு செல்கின்றனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் உள்ளது. மேலும் பல வசதிகள் மாநகராட்சி படிப்பகத்தில் அமைக்கப்பட உள்ளது இங்கு படிக்கின்ற அதிக பேர் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பதுதான் எனது எண்ணம் அதற்கு தகுந்த போல் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் தெரிவித்தார்.