தூத்துக்குடியில் தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா அனுசரிப்பு!
தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் 138 வது பிறந்தநாள் விழா அனுசரிக்கபட்டது.
திருமங்கலத்தில் வாழ்ந்த சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ். இவர் நாடக நடிகராக இருந்து கொண்டு 1919 முதல் தனது மேடை பாடல் மூலமாக வெள்ளையர்களுக்கு எதிராக பாடல் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதற்காக அவர் 29 முறை ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது பிறந்த நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்திவோர் சங்கம் (சிஐடியு) சார்பில் பிரையன்ட் நகர் சந்திப்பில் அவரது உருவபடத்திற்கு மாலை அனிவித்து இணிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதற்கு சங்கத்தின் தலைவர் டென்சிங் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.ரசல், மாவட்ட தலைவர் இரா.பேச்சிமுத்து, தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்திவோர் சங்கம் (சிஐடியு) பொதுச் செயலாளர் எஸ்.நாகராஜ், கெளரவ தலைவர் சதா சிவம், துணைச் செயலாளர்கள் கே.கே.கருப்பசாமி, கருணா மூர்த்தி, பொருளாளர் வேல் முருகன், சிபிஎம் மாநகர் செயலாளர் எம்.எஸ்.முத்து, மாநகர் குழு உறுப்பினர் ஆறுமுகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.