ஸ்பிக் நிறுவனம் சார்பில் ரூ.9லட்சம் மதிப்பில் 11 இடங்களில் சிசிடிவி கேமரா!

தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனம் சார்பில் ரூ.9லட்சம் மதிப்பில் 11 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்பிக் நிறுவனம் சார்பில் ரூ.9லட்சம் மதிப்பில் 11 இடங்களில் சிசிடிவி கேமரா!

தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனம் சார்பில் ரூ.9லட்சம் மதிப்பில் 11 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் ஸ்பிக் நகரை சுற்றியுள்ள அத்திமரப்பட்டி விலக்கு, டாக் நகர், முத்தையாபுரம் பல்க், ஸ்பிக் நகர் உட்பட 11 இடங்களில் ரூ.9லட்சம் மதிப்பில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டவுன் டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையில் ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன் இதனை தொடங்கி வைத்தார். விழாவில் ஸ்பிக் முதன்மை நிர்வாக மேலாளர் ஜெயபிரகாஷ், மக்கள் தொடர்பு அலுவலர் அமிர்தா கெளரி, உதவி அலுவலர் குணசேகரன், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.