“ராகுல் காந்தி தவறான வழிநடத்தல்” – தூத்துக்குடியில் காங்கிரஸ் கவுன்சிலர் அதிரடி ராஜினாமா!

“ராகுல் காந்தி தவறான வழிநடத்தல்” – தூத்துக்குடியில் காங்கிரஸ் கவுன்சிலர் அதிரடி ராஜினாமா!

காங்கிரஸ் கட்சியினை ராகுல்காந்தி தவறாக வழிநடத்துவதாகக் கூறி தூத்துக்குடியில் காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் தனது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "நான் கடந்த 1988 முதல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறேன். தூத்துக்குடியில் 1996 முதல் நகர் மன்ற உறுப்பினராகவும், பின்பு மாமன்ற உறுப்பினராகவும் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன்.

திமுக கூட்டணி சார்பாக 2 முறையும், காங்கிரஸ் சார்பாக தனித்து போட்டியிட்டு 3 முறையும் மாமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறேன். மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறேன். மாநகராட்சி காங்கிரஸ் கொறடாவாகவும் பொறுப்பு வகித்து வருகிறேன்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ராகுல் காந்தியின் தவறான வழிகாட்டுதலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறான வழிகாட்டுதலாலும் இந்த முடிவை எடுக்கிறேன். எனது மாநகராட்சி கவுன்சிலர் பதவியைத் தவிர அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.