கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் பல கோடி ரூபாய் மோசடி : பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்!!

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் பல கோடி ரூபாய் மோசடி : பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருமான வரி கணக்கு பல கோடி ரூபாய் மோசடி, மோசடியில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகிகள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் பள்ளி கல்வித்துறையை கண்டித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டம் 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியாக கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் பணி புரியும் 29 ஆசிரியர்களின் வருமான வரி கணக்கை கடந்த 10 ஆண்டுகளாக வருமான வரித்துறைக்கு செலுத்தாமல் போலியான வங்கி காசோலை ஆகியவற்றை தயாரித்து பள்ளி நிர்வாகம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது 

இதன் காரணமாக அந்தப் பள்ளியின் பணிபுரியும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த மோசடியில் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து கோவில்பட்டி பள்ளி கல்வித்துறை ஊழியர்களும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது 

மேலும் அரசு உதவி பெறும் பள்ளியான இந்த பள்ளியில் ஏழை மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்துள்ளனர் 

இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை காவல்துறை ஆகியவற்றிற்கு புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை 

இதைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் மயில் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முற்றுகையிட்டு பள்ளி கல்வித்துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர் .