பாலக்காடு – திருச்செந்தூர் ரயில் பாதை மாற்றம்… முக்கிய நிலையங்கள் ரத்து!

பாலக்காடு – திருச்செந்தூர் ரயில் பாதை மாற்றம்… முக்கிய நிலையங்கள் ரத்து!

விருதுநகர் ரயில்வே யார்டு பகுதியில் நடைபெறும் அவசர பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாலக்காடு – திருச்செந்தூர் இடையேயான ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இன்று (புதன்கிழமை) காலை 10:50 மணி முதல் மாலை 4:50 மணி வரை நடைபெறும் பணிகள் காரணமாக, அந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பாலக்காடு – திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், வழக்கமான பாதைக்கு பதிலாக மதுரை, மானாமதுரை மற்றும் விருதுநகர் வழியாக இயக்கப்படும்.

இந்த மாற்றத்தின்போது:

❌ திருப்பரங்குன்றம், திருமங்கலம் நிலையங்களில் நிறுத்தம் இல்லை

✅ மதுரை கிழக்கு, மானாமதுரை நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்படும்

பயணிகள் இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தங்களது பயணத்தை திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.