தூத்துக்குடி மாவட்டத்தில் பிப்ரவரி 14 சிறப்பு ரேஷன் முகாம் – முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்ய வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பிப்ரவரி 14 சிறப்பு ரேஷன் முகாம் – முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்ய வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் (PDS) சிறப்பாக நடைபெற மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 14, 2026 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.

இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டைக்கு தொடர்பான பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளன. அவை:

  • குடும்ப அட்டையில் முகவரி மாற்றம்
  • பெயர் திருத்தம்
  • உறுப்பினர் சேர்த்தல் / நீக்குதல்
  • புதிய குடும்ப அட்டை விண்ணப்பம்
  • நகல் குடும்ப அட்டை கோருதல்

மேலும், குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படாதிருந்தால், முகாமிலேயே புகைப்படம் பதிவு செய்து வழங்கப்படும்.

பொது விநியோகத் திட்டம் தொடர்பான பிற குறைகளையும் பொதுமக்கள் நேரடியாக தெரிவித்து தீர்வு பெறலாம். எனவே, தேவையுடைய பொதுமக்கள் தங்கள் குறைகளை மனு மூலம் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.