தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிஎஸ்ஐ ஆலயம் சாா்பில் நலத்திட்ட உதவிகள்..!

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிஎஸ்ஐ ஆலயம் சாா்பில் நலத்திட்ட உதவிகள்..!

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிஎஸ்ஐ ஆலயம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி கிறிஸ்தவா்களின் முக்கிய திருவிழாவான கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி தூத்துக்குடி ஆசிாியா் காலணியில் உள்ள சிஎஸ்ஐ ஆலயம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் உறுப்பினா்களாக உள்ளவா்களின் மிகவும் வறுமையில் உள்ள 45 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு சிஎஸ்ஐ ஆலயம் சாா்பில் குணசேகரன், பகத்சிங், நவசிங்காசி அருண்ஜெபக்குமாா் ஜான்சன் ராஜேந்திரன். கிளாட்சன் ஜோஸ்வா ஆகியோா் அாிசி முடை, கோதுமைமாவு, பருப்பு, எண்ணெய் உள்பட 1800 மதிப்புள்ள மளிகை பொருட்களை வழங்கினாா்கள். 

      நிகழ்ச்சியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநிலத்தலைவர் மருதப்பெருமாள் செயலாளர் ஜெபராஜ் பொருளாளா் செல்வகுமரன், உள்பட சபை உறுப்பினா்கள் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.