அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தூத்துக்குடியில் ஜாக்ட்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

தொழிலாளர்கள் விரோத சட்டங்கள் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலையுடையார், உமாதேவி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் ச.ஆனந்தி வரவேற்று பேசினார். ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் தே.முருகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கழகம் மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர் தமிழ்நாடு சத்துணவு சங்க மாவட்ட தலைவர் ஜெயபாக்கியம் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட செயலாளர் மாரிச் செல்வம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திர பிரபு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில செயற்குழு உறுப்பினர் பிரான்சிஸ் தமிழக ஆசிரியர் கூட்டணி ஜீவானந்தம் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கம் மாவட்ட செயலாளர் முத்தையா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர் செயலாளர் சிவன் ஞானம் மகாராஜா நன்றி கூறினார்