17 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் விளக்கில் இருந்த +2 மாணவி வீட்டிற்கு - 3 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்!!
சாத்தான்குளத்தில் 17 வருடமாக மின் விளக்கு இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கில் படித்து தற்போது 12-ம் வகுப்பு தேர்வு எழுதி வரும் மாணவியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் மாவட்ட ஆட்சியர் 3 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கினார்...!
சாத்தான்குளத்தில் 17 வருடமாக மின் விளக்கு இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கில் படித்து தற்போது 12-ம் வகுப்பு தேர்வு எழுதி வரும் மாணவியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் மாவட்ட ஆட்சியர் 3 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கினார்...!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வீரஇடக்குடி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி. கணவரை இழந்த இவரது மகள் பேச்சித்தாய் பிளஸ்-2 படித்து வருகிறார். மகன் ஜயப்பன் 5-ம் வகுப்பு படிக்கிறார். லட்சுமி முறுக்கு வியாபாரம் செய்து குழந்தைகளை வளர்த்து வருகிறார். இவரது வீட்டுக்கு மின்இணைப்பு இல்லை. இதனால் இவரது மகளான பிளஸ்-2 மாணவி பேச்சித்தாய் தேர்வுக்கு படிக்க மிகவும் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து வாட்ஸ் அப் குழுக்களில் ெசய்தி வைரலானது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாணவி வீட்டுக்கு மின்இணைப்பு உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, உதவி மின் செயற்பொறியாளர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று லட்சுமி வீட்டை பார்வையிட்டு மின் இணைப்பு வழங்க துரித நடவடிக்கை எடுத்தனர். இதை தொடர்ந்து நேற்று திங்கள்கிழமை மாலையில் திங்கள்கிழமை மாணவி வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மின் இணைப்பு வழங்கிய ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு லட்சுமியும், அவரது மகளும் நன்றி ெதரிவித்து கொண்டனர்.