விளாத்திகுளம் எம்.எல்.ஏ மீது காவல் நிலையத்தில் பாஜக வினர் புகார் மனு..!

ஜெயலலிதாவை கொன்றது பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவினரும் தான் என திமுக எம்எல்ஏ மார்க்கன்டேன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விளாத்திகுளம் எம்.எல்.ஏ மீது காவல் நிலையத்தில் பாஜக வினர் புகார் மனு..!

ஜெயலலிதாவை கொன்றது பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவினரும் தான் என திமுக எம்எல்ஏ மார்க்கண்டேய‌ன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் உள்ள பெரியசாமி புரத்தில் கடந்த ஜனவரி 6ம் தேதி திமுகவின் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்தது பிரதமர் மோடியும் பாஜக கட்சியை சேர்ந்தவர்களும் தான் என குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அவர் பேசிய வீடியோ வாட்ஸ்அப் உட்பட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து பாஜக மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி விளாத்திகுளம் தெற்கு ஒன்றியம் சார்பில் அதன் தலைவர் பார்த்திபன் தலைமையில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் , விளாத்திகுளம் காவல் நிலையம் மற்றும் சூரங்குடி, காடல்குடி உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் மார்கண்டேயன் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர். 

 இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய தலைவர் பார்த்திபன், "திமுக எம்எல்ஏ எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஒரு பிரதமரை குற்றவாளி என்று பேசினார், இது தனிப்பட்ட பிரச்சனையல்ல, தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடியையும் அவர் சார்ந்துள்ள பாஜகவினரையும் கொலை குற்றவாளிகளாக அவதூறாக சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டுள்ளது.  வரும் 11ம் தேதி விளாத்திகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார். விளாத்திகுளம் பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் புகார் கொடுக்கும் நிகழ்வில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.