கருங்குளத்தில் பயணிகள் நிழற்குடை : எம்.எல்.ஏ சண்முகையா அடிக்கல் நாட்டினார்..!

கருங்குளத்தில் பயணிகள் நிழற்குடை : எம்.எல்.ஏ சண்முகையா அடிக்கல் நாட்டினார்..!

கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வசவப்புரம் ஊராட்சி அனவரதநல்லூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம் சி.சண்முகையா அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மற்றும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களை சந்தித்துகிராமத்திற்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டாரிந்தார்..

இந்நிகழ்வின்போது உதவி பொறியாளர்கள் மாரியப்பன், தளவாய் , வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, ஊராட்சி செயலர் திருமதி.முத்து, கருங்குளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு.ராமசாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் திரு.பக்கபட்டி சுரேஷ், திரு.வீரபாகு, ஒன்றிய ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் திரு.பந்தல் பரமசிவன், ஒன்றிய வர்த்தகர் அணி திரு.கண்ணன், கிளை செயலாளர் திரு.முருகன், திரு.ராமசுப்பு மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..