திருச்செந்தூர் பிரதான சாலை இருளில்! தெற்கு பகுதி புறக்கணிப்பு – மாநகராட்சி மீது கடும் குற்றச்சாட்டு..!

திருச்செந்தூர் பிரதான சாலை இருளில்! தெற்கு பகுதி புறக்கணிப்பு – மாநகராட்சி மீது கடும் குற்றச்சாட்டு..!

தூத்துக்குடி மாநகராட்சியின் தொடர்ச்சியான அலட்சியத்தால், தெற்கு பகுதி மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. தூத்துக்குடி–திருச்செந்தூர் சாலையில் பல நாட்களாக சாலை நடுவே உள்ள விளக்குகள் எரியாமல் இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக, இந்த சாலை திருச்செந்தூர் செல்லும் பிரதான வழித்தடமாகும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பக்தர்கள் பயணம் செய்யும் இந்த சாலை, தற்போது முழுமையான இருளில் மூழ்கி காணப்படுகிறது.

உப்பாற்று ஓடை முதல் முத்தையாபுரம் சந்திப்பு வரை  இந்த பகுதியில், இரவு நேரங்களில் பயணம் செய்வது மக்கள் உயிருக்கு ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளது. பெண்கள், மாணவர்கள், வேலை முடித்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் – அனைவரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

“வரி வசூலில் மட்டும் தீவிரம்… ஆனால் அடிப்படை வசதிகளில் பூஜ்யம்!” என மக்கள் மாநகராட்சியை கடுமையாக சாடுகின்றனர். தெற்கு பகுதி என்றாலே நிர்வாகம் கண்கூடாக புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டு மேலும் வலுத்துள்ளது.

இருள் சூழ்ந்த இந்த சாலை விபத்துகள், திருட்டு மற்றும் பிற குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் எச்சரிக்கின்றனர்.

 “திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையையே பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத மாநகராட்சி, மக்களின் உயிர் பாதுகாப்பை எப்படி உறுதி செய்யும்?” என்ற கேள்வி தற்போது பொதுமக்களிடையே தீவிரமாக எழுந்துள்ளது.