தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் நேரடியாக புகார்களை தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பி. கீதா ஜீவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தொகுதியில் அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளையும் புகார்களையும் மேற்கண்ட QR-CODE அல்லது வாட்ஸ்ஆப் எண்(80980 24555) மூலமாகவோ அல்லது தொலைபேசி எண்(80980 24555) மூலமாகவோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் (https://pgeethajeevan.com/petition/?lang=ta) மூலமாகவோ அமைச்சர் கீதா ஜீவனிம் நேரடியாக தெரிவிக்கலாம். தங்கள் புகார்களுக்கு குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.